தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது புகார்: காவல்துறை விசாரணை! - தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்

டெல்லி: செண்டர் ஃபார் ஈக்விட்டி ஸ்டடிஷ் அமைப்பின் கீழ் இயங்கிவரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது புகார்
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது புகார்

By

Published : Feb 5, 2021, 4:08 PM IST

டெல்லியில் சென்டர் ஃபார் ஈக்விட்டி ஸ்டடிஸ் (Centre for Equity Studies) என்ற அமைப்பின் கீழ் உமீத் அமன் கார், குஷி ரெயின்போ என்னும் இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இவற்றின் மீது குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மெஹ்ராலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சென்டர் ஃபார் ஈக்விட்டி ஸ்டடிஸ் அமைப்பின் அறக்கட்டளை உறுப்பினர், முன்னாள் ஆட்சியர் ஹர்ஷ் மந்தர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தொண்டு நிறுவனம் முறைகேடு: மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் டிஎஸ்பியிடம் புகார்!

ABOUT THE AUTHOR

...view details