தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சோபியான் என்கவுன்ட்டரில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை! - என்கவுன்ட்டர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டர் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

Shopian Encounter: two militants killed mobile internet services snapped internet services blocked in Jammu and Kashmir JK encounter ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டர் பயங்கரவாதிகள்
Shopian Encounter: two militants killed mobile internet services snapped internet services blocked in Jammu and Kashmir JK encounter ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டர் பயங்கரவாதிகள்

By

Published : Mar 22, 2021, 10:49 AM IST

சோபியான்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தென்பகுதி மாவட்டமான சோபியானில் உள்ள மணிகில் பட்டபுரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய உளவுத் தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின்பேரில் பாதுகாப்பு படையினர் நேற்று (மார்ச் 21) தீவிர ரோந்து சுற்றி வந்தனர். அப்போது இரவு 9.30 மணியளவில் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தியதில், பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர். எனினும் அந்தப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

அங்கு கூடுதலாக மூன்று அல்லது நான்கு பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details