ஜம்மு காஷ்மீரில் அண்மையில் இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஸ்ரீநகரின் பரிம்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினரும், காவல் துறையும் பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
இருவர் கைது
சில இடங்களில் நேற்று (ஜூன் 28) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சோதனை செய்தபோது, பின்புறம் இருந்த நபர் தன் கைப்பையிலிருந்து எதையோ எடுக்க முயன்றார். இதைக் கண்ட பாதுகாப்புப் படையினர் பையைச் சோதித்தபோது, அதில் கையெறி குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பயங்கரவாதிகளுக்கு ஸ்கெட்ச்
இதையடுத்து, இருவரையும் கைதுசெய்து காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணையில், இருவரில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதும், மற்றொருவர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உயர்மட்ட தளபதி நதீம் அப்ரார் என்பதும் தெரியவந்தது.