கட்னி:மத்தியப் பிரதேசம் கட்னி மாவட்டத்தில் சுரங்கப்பாதையின் பாதளக் கால்வாய் கட்டடப் பணியின்போது நேற்று திடீரென சில பகுதிகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் ஒன்பது தொழிலாளர்கள் அந்த இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
இந்நிலையில் மாநிலப் பேரிடர் அவசர மீட்புப் படைக் குழுவினர் (SDERF) ஐந்து பேரை மீட்டனர், மீதமுள்ள நான்கு தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்த நிலையில் நேற்று இரண்டு தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.
மத்தியப் பிரதேசம் போபாலிலிருந்து 450 கி.மீ. தொலைவில் கட்னி மாவட்டம் உள்ளது. தற்போது 26 வயதான ரவி மஸல்கர், 32 வயதான கோர்லால் கோல் ஆகியோரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டன.
இது குறித்து தலைமைக் காவல் ஆணையர் மனோஜ் கேடியா கூறுகையில், “விபத்தில் சிக்கிய ஒன்பது தொழிலாளர்களில் ஏழு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அவர்களது உடல்நிலை நன்றாக உள்ளது. இருவர் இறந்துள்ளனர்” என்றார்.
மேலும் மத்தியப் பிரதேச கூடுதல் தலைமைச் செயலர் ராஜேஷ் ராஜோரோ மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டார். இவரின் தலைமையின்கீழ் மீட்புப் பணியாளர்கள் துரிதமாகச் செயல்பட்டனர்.
முன்னதாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் கட்னி மாவட்டத்தின் ஆட்சியரைத் தொடர்புகொண்டு மீட்புப் பணி குறித்து விசாரித்துள்ளார். உடனடி சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ம.பி.யில் சுரங்கப்பாதையின் பாதளக் கால்வாய் கட்டடம் இடிந்தது: 5 பணியாளர்கள் மீட்பு