மகாராஷ்டிரா மாநிலம் கோரேகானில் பெண் ஒருவர் சலூன் கடை நடத்தி வருகிறார். அவரிடம், பத்திரிகையாளர்கள் இருவர் பணம் கேட்டு கடந்த இரண்டு மாதங்களாக மிரட்டி வந்துள்ளனர். அந்த பெண்ணும் பணம் கொடுத்து வந்தார். தொடர்ந்து, 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பணம் கேட்டு மிரட்டிய பத்திரிகையாளர்கள் இருவர் கைது! - பணம் கேட்டு மிரட்டிய இரண்டு பத்திரிக்கையாளர்கள் கைது
மும்பை: கோரேகானில் செயல்பட்டு வரும் சலூன் கடையின் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய பத்திரிகையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து கோரேகான் துணை ஆணையர் தீபக் படாங்காரே கூறுகையில், "கடந்த இரண்டு மாதங்களாக பத்திரிகையாளர்கள் இருவர், பணம் கேட்டு மிரட்டுவதாக பெண் ஒருவர் புகார் அளித்தார். அவர்களை கைது செய்ய திட்டமிட்டோம்.
குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் சலூன் கடை உரிமையாளரான அந்த பெண்ணிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தனர். அந்தப் பெண்ணும் பணம் கொடுத்து வந்தார். தற்போது, ரூ. 50 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளனர். எனவே, திட்டமிட்டு அவர்களை பணம் வாங்க வரவழைத்து கையும் களவுமாகப் பிடித்தோம். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம்" என்றார்.