ஸ்ரீநகர்:ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று (ஆகஸ்ட் 31) நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து சோபூர் போலீசார் தரப்பில், "இந்த துப்பாக்கிச்சூடு நேற்றிரவு நடந்தது. அப்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட இருவரும் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமத் இயக்கத்தை சேர்ந் முகமது ரஃபி மற்றும் கைசர் அஷ்ரஃப் என்பது தெரியவந்துள்ளது. இருவரும் பல பயங்கரவாத குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள். குறிப்பாக சோபூர் பகுதியில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:முன்விரோதம் காரணமாக காவலர் கொலை