கண்ணூர்: கேரள மாநிலம், கண்ணூரில் குட்டியாட்டூரைச் சேர்ந்த பிரஜித்(32)- ரீஷா(26) தம்பதிக்கு பார்வதி என்ற 8 வயது மகள் உள்ளார். ரீஷா மீண்டும் கருவுற்றிருந்தார். இந்த நிலையில் இன்று(பிப்.2) பிரஜித், ரீஷா இருவரும் தங்களது குடும்பத்தினருடன் காரில் மாவட்ட மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர்.
தம்பதி இருவரும் காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்தனர். ரீஷாவின் பெற்றோர், மாமியார், மகள் பார்வதி ஆகிய நால்வரும் பின் சீட்டில் அமர்ந்திருந்தனர். மாவட்ட மருத்துவமனை அருகே சென்றபோது கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக காரில் இருந்த அனைவரும் வெளியேற முயன்றனர்.