நேற்று மாலை, ஜம்முவில் உள்ள சத்வாரி பகுதியில் உள்ள பாலியன் மண்டல் காவல் நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான கருப்பு நிற பேக் பையினுள் டைமர்களுடன் கூடிய இரண்டு மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனமான IED கண்டெடுக்கப்பட்டன.
ஜம்முவில் இரண்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு...! - IED
ஜம்முவில் டைமர்களுடன் கூடிய இரண்டு மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு சாதனமான IED கண்டுபிடிக்கப்பட்டு சரியான நேரத்தில் செயலிழக்கப்பட்டதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
ஜம்மு பகுதியில் இரண்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
இந்த IEDகள் பின்னர் வெடிகுண்டு செயலிழக்கப் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் நடைபெற இருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதனையடுத்து அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Nov 15, 2022, 8:19 AM IST