தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகா மிக்ஸி வெடிப்பு பயங்கரவாத செயல் அல்ல - போலீஸ் விளக்கம் - மிக்ஸி வெடிப்பு காரணம்

கர்நாடக மாநிலம் மிக்ஸி வெடிப்பு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த தாக்குதல் பயங்கரவாத செயல் அல்ல என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மிக்ஸி வெடிப்பு பயங்கரவாத செயல் அல்ல
கர்நாடகா மிக்ஸி வெடிப்பு பயங்கரவாத செயல் அல்ல

By

Published : Dec 28, 2022, 10:05 AM IST

பெங்களூரு:கர்நாடக மாநிலம் ஹாசனில் நடந்த மிக்ஸி வெடிப்பு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த தாக்குதல் பயங்கரவாத செயல் கிடையாது. தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்துள்ளது என்று காவல் கண்காணிப்பாளர் ஹரிராம் சங்கர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த மிக்ஸி வெடிப்பு சம்பவத்துக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. இந்த பார்சலை பெறும் நபரை குறிவைத்து சிறிய அளவிலான வெடிப்பொருள்களை பயன்படுத்தப்பட்டுள்ளது.

முன்விரோதம் காரணமாக மட்டுமே நடந்துள்ளது. இந்த பார்சலை அனுப்பியவர் அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேரை கைது செய்துள்ளோம். விசாரணை அடுத்த கடத்தை எட்டியுள்ளது. பொதுமக்கள் வதந்திகளை நம்பி பீதியடைய வேண்டாம் எனத் தெரிவித்தார்.

கர்நாடகா மாநிலம் ஹாசனில் டிசம்பர் 26ஆம் தேதி கூரியர் கடையில் மிக்ஸி வெடித்து சிதறியதில் கடை உரிமையாளர் சசி பலத்த காயமடைந்தார். இந்த சம்பவம் கே.ஆர்.புரம் நகரில் உள்ள தனியார் கூரியர் அலுவலகத்தில் இரவு 7:30 மணியளிவில் நடந்துள்ளது. வெடித்து சிதறிய மிக்ஸி கடந்த வாரம் கூரியர் அலுவலகத்துக்கு வந்துள்ளது.

அதனை வாங்கிச்சென்றவர் 2 நாளுக்கு பின் அது சரியான முகவரியில் இருந்து வரவில்லை என்று கூறி மிக்ஸியை திருப்பிக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில், வெடித்து சிதறியுள்ளது.

இதையும் படிங்க:"இந்த விமானத்தில் வெடிகுண்டு உள்ளது" - ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் மிரட்டல் எழுத்துக்கள்

ABOUT THE AUTHOR

...view details