ஜம்மு காஷ்மீரின் லாவேபோரா பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தியதில் இரண்டு சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், இத்தாக்குதலில் தொடர்பு இருப்பதாகக் கூறி, இருவரை ஜம்மு காஷ்மீர் காவல் துறை கைதுசெய்துள்ளது.
இதுகுறித்து காவல் துறை இயக்குநர் விஜய் குமார் கூறுகையில், "இந்த வழக்கை காவல் துறையினர் தீர்த்துவிட்டனர். நேற்று நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக இரண்டு களப்பணியாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒரு கார் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.