தமிழ்நாடு

tamil nadu

தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை: இருவர் கைது

By

Published : Jun 15, 2021, 9:57 AM IST

ராஜஸ்தானில் உள்ள தனியார் நிறுவனத்தில் தூப்பாக்கி முனையில் மிரட்டி 17 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

two-held-for-looting-17-kg-gold-from-pvt-finance-company-in-rajasthan
two-held-for-looting-17-kg-gold-from-pvt-finance-company-in-rajasthan

ஜெய்பூர்: தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்த நான்கு பேரில் இருவரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவன அலுவலகத்தில் நான்கு பேர் நேற்று (ஜூன் 14) துப்பாக்கி முனையில் 17 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற நிலையில் இருவரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

இது குறித்து, சுரு மாவட்ட எஸ்.பி. நாராயண் டோகாஸ் கூறுகையில், ”ரிலையன்ஸ் மால் அருகே உள்ள நிதி நிறுவனத்தில் நான்கு பேர் கொண்ட கும்பல் நேற்று அலுவலகத்தில் இருந்த மேலாளர் உள்பட நான்கு பேரை துப்பாக்கி முனையில் மிரட்டி 17 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரில் ஷர்தாப், ஹனிஷ் ஆகிய இருவரை ஹரியானாவில் தங்கத்துடன் கைதுசெய்துள்ளோம். தலைமறைவாக உள்ள ரஞ்சித்தையும், அனிஷையும் தேடும் பணி நடைபெற்றுவருகிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம்: அமைச்சகங்களை மதிப்பாய்வு செய்யும் மோடி!

ABOUT THE AUTHOR

...view details