தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரு சடலத்திற்கு இரண்டு இறுதிச்சடங்குகள் - புதைக்கப்பட்ட உடலில் இருக்கும் மர்மம் என்ன? - MP Balaghat

புதைக்கப்பட்ட சடலத்தை மீட்டது மட்டுமில்லாமல், அதற்கு இரண்டாவது முறையும் இறுதிச் சடங்குகள் காவல்துறை முன்னிலையில் நடைபெற்றுள்ளன.

ஒரு சடலத்திற்கு இரண்டு இறுதிச்சடங்குகள் - புதைக்கப்பட்ட உடலில் இருக்கும் மர்மம் என்ன?
ஒரு சடலத்திற்கு இரண்டு இறுதிச்சடங்குகள் - புதைக்கப்பட்ட உடலில் இருக்கும் மர்மம் என்ன?

By

Published : Jun 7, 2022, 10:11 AM IST

பாலக்ஹாட் (மத்தியபிரதேசம்): கடந்த சில நாள்களுக்கு முன்பு மத்தியப் பிரதேச மாநிலம் பாலக்ஹாட் மாவட்டத்தில் உள்ள பைஹார் ஜட்டா பந்தேரி ஆற்றின் கரையில், கோட்பார் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில், அடையாளம் தெரியாத நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பைஹார் காவல் நிலையத்தினர், சுற்றியுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், பைஹார் உக்வா காவல் நிலையத்தில் அமித் ஜேம்ஸ் உக்வா என்பவர், தனது தந்தையான ஆனந்த் ஜேம்ஸைக் காணவில்லை என்று புகார் அளித்தார். இதனால், ஆற்றில் கிடைத்த சடலத்தின் அடையாளத்தைக் காண உறவினர்கள் வரவழைக்கப்பட்டனர். இறந்தவரின் உடலில் உள்ள அடையாளங்களின் அடிப்படையில், இறந்தவர் ஆனந்த் ஜேம்ஸ் என உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து பைஹார் காவல்துறையினர், சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அவர்களது மத வழக்கப்படி பைஹார் மிஷன் பள்ளிக்கு அருகிலுள்ள கல்லறையில் உடலை அடக்கம் செய்தனர். இந்த இடத்தில்தான் அடுத்த திருப்புமுனையை சந்திக்க காவல்துறை காத்திருந்தது.

ஒரு சடலத்திற்கு இரண்டு இறுதிச்சடங்குகள் - புதைக்கப்பட்ட உடலில் இருக்கும் மர்மம் என்ன?

மலாஜ்கண்ட் திகிபூரைச் சேர்ந்த பைகா குடும்பத்தினர், இறந்தவரின் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் பார்த்துள்ளனர். அப்போது, ​​இறந்தவர் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த சுக்லால் பார்டே என்று பைஹார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், இரு குடும்பத்தினரின் முன்னால் புதைக்கப்பட்டிருந்த சடலத்தை பைகார் காவல்துறையினர் வெளியே எடுத்தனர்.

பின்னர், இரு குடும்பத்தினரின் பரஸ்பர ஒப்புதல் மற்றும் இறந்த உடலின் அடையாளங்களின் அடிப்படையில், இறந்தவர் சுக்லால் பரேட் என்று கருதப்பட்டார். இதனையடுத்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. எனவே, இரண்டாவது முறையாக இறந்தவரின் உடலிற்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.

இவ்வாறு புதைக்கப்பட்ட சடலத்தை மீட்டு, மீண்டும் இறுதிச்சடங்குகள் நடத்திய சம்பவம், பைஹார் பகுதியில் பெரும் அச்சத்துடன் கூடிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:நீச்சல் தெரியாமல் கடலில் குதித்த 17 வயது மாணவர் உயிரிழப்பு - சகமாணவர்கள் காப்பாற்றாமல் வீடியோ எடுத்த அவலம்!

ABOUT THE AUTHOR

...view details