தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இரண்டு மாடி கட்டடம் இடிந்து விழுந்து நான்கு பேர் உயிரிழப்பு - telangana building collapse

தெலங்கானாவில் இரண்டு மாடி கட்டடம் இடிந்து விழுந்து நான்கு பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

two-floor-building-collapsed-four-died-in-yadagirigutta
two-floor-building-collapsed-four-died-in-yadagirigutta

By

Published : Apr 29, 2022, 8:12 PM IST

ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் யாதகிரிகுட்டாவில் இன்று (ஏப். 29) இரண்டு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து தீயணைப்புத்துறை, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், அங்குவிரைந்த போலீசார் நான்கு பேரின் உடல்களையும் மீட்டு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். அதோடு படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

முதல்கட்ட தகவலில், இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருப்பதும், இந்த கட்டடத்தில் குடியிருப்புகள், கடைகள் இருந்ததும் தெரியவந்தது. தற்போது மீட்புப்பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மதுரை மேம்பாலம் விபத்து: ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம் - தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி நடவடிக்கை

ABOUT THE AUTHOR

...view details