டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இந்த கூட்டத்தில் இன்று (டிசம்பர் 12 ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதா என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
இந்த பதிலில், விசாகப்பட்டினத்தில் பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடத்தை அமைப்பதற்கான திட்டம் மத்திய அரசிடம் கிடையாது. ஏற்கனவே, உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 2 பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடங்கள் நிறுவப்பட உள்ளன. உத்தரப்பிரதேசப் பாதுகாப்புத் தொழில்துறை வழித்தடத்திற்காக (UPDIC) 12,139 கோடி ரூபாய் முதலீட்டில் 105 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்திடப்பட்டுள்ளன.