தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 11ஆம் தேதி காலை தமிழ்நாடு கரையை நெருங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை: பள்ளி, கல்லூரிக்கு இரண்டு நாள் விடுமுறை - தமிழ்நாட்டில் கனமழை
கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிக்கு மேலும் இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை
கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருவதால், பல்வேறு மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவம்.10), நாளை மறுநாள் (நவம்.11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Nov 9, 2021, 3:19 PM IST