தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு: துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 2 பேர் உயிரிழப்பு - Indian Army

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு: துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் உயிரிழப்பு - ஒருவர் காயம்
ஜம்மு: துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் உயிரிழப்பு - ஒருவர் காயம்

By

Published : Dec 16, 2022, 9:52 AM IST

ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீரின்ரஜோரி மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 16) வழக்கம்போல் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காலை 6.15 மணியளவில், ராணுவ முகாம் உள்ள ஆல்பா கேட் அருகே பயங்கரவாதிகள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்க ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டின்போது பொதுமக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார். உயிரிழந்தது ரஜோரியில் வசித்து வந்த ஷாலிந்தர் குமார் மற்றும் கமல் கிஷோர் ஆகிய இருவரும் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:காஷ்மீர் செய்தியாளருக்கு ஐ.நா.வின் மதிப்புமிக்க விருது வழங்கல்

ABOUT THE AUTHOR

...view details