பாட்னா:பிகார் மாநிலம் பாட்னாவிலுள்ள பிக்தா பகுதியைச் சேர்ந்த அனிஷ் குமார், ஷிவம் குமார் என்ற இரண்டு சிறுவர்கள் கடந்த மார்ச் 23ஆம் தேதி காணாமல்போனதாக காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகாரளித்தனர்.
இந்தப் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்த காவல் துறையினருக்கு, பன்புன் ஆற்றங்கரையோரம் இரு சிறுவர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற காவலர்கள், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்கு அனுப்பினர்.