மத்தியப் பிரதேசம்: நபீபியாவில் இருந்து மத்தியப் பிரதேச மாநிலம் குனோ(kuno) தேசிய பூங்காவிற்கு 8 சிவிங்கி புலிகள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன. இந்த சிவிங்கி புலிகளை பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி பூங்காவில் ஒப்படைத்தார்.
வேறு கண்டத்தில் இருந்து கொண்டு கொண்டு வரப்பட்ட விலங்கு என்பதால் அவற்றின் உடல் நிலையை கண்காணிக்கவும், உணவு, சுற்றுச்சூழல் பழக்கத்திற்காக சிறிய பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டன.
தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த நிலையில், எட்டு சிவிங்கி புலிகளுக்கும் ஆரோக்கியமாக இருப்பதாக மத்திய கால்நடை பராமரிப்புத் துறை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தடையில்லா சான்று வழங்கியது.