தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத்தில் 2 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்

குஜராத் அமைச்சர்கள் ராஜேந்திர திரிவேதி மற்றும் பூர்ணேஷ் மோடி மீது தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், அவர்களிடமிருந்து வருவாய், சாலை மற்றும் கட்டிடத் துறைகள் பறிக்கப்பட்டுள்ளன.

cabinet
cabinet

By

Published : Aug 21, 2022, 3:50 PM IST

காந்தி நகர்:குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அமைச்சர்கள் ராஜேந்திர திரிவேதி மற்றும் பூர்ணேஷ் மோடியிடமிருந்து, வருவாய், சாலை மற்றும் கட்டிடத் துறைகள் பறிக்கப்பட்டுள்ளன. இரு அமைச்சர்கள் மீதும் தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்ததால் இந்த துறைகள் பறிக்கப்பட்டுள்ளன. இந்த இரு துறைகளையும் கூடுதல் பொறுப்பாக முதலமைச்சர் புபேந்திர படேல் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவி, கூடுதலாக வருவாய்த்துறை இணை அமைச்சராகவும் பொறுப்பு வகிப்பார் என்றும், வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் ஜெகதீஷ் பஞ்சால், கூடுதலாக சாலை மற்றும் கட்டிடத்துறை இணை அமைச்சராகவும் பொறுப்பு வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ராஜேந்திர திரிவேதியிடம் பேரிடர் மேலாண்மை, சட்டம் மற்றும் நீதி, சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை ஆகியவை உள்ளன. அதேபோல், பூர்ணேஷ் மோடி போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து, சுற்றுலா மற்றும் புனித யாத்திரை மேம்பாட்டுத் துறைகளின் பொறுப்பை தொடர்ந்து வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பசுவுக்காக ஐந்து பேரை கொன்றோம்... பாஜக பிரமுகரின் சர்ச்சைப் பேச்சு... போலீசார் வழக்குப்பதிவு...

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details