ராஜஸ்தான் மாநிலம்பார்மெர் மாவட்டத்திலுள்ள பார்மெர் - சௌஹடான் சாலையில் நேற்று(நவ.4) ராணுவ டிரக் சென்றுகொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிலிருந்த 2 பிஎஸ்எஃப் ஜவான்கள் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ராஜஸ்தான் சாலை விபத்தில் 2 பிஎஸ்எஃப் ஜவான்கள் உயிரிழப்பு - ராஜஸ்தானில் பிஎஸ்எஃப் ஜவான்கள் உயிரிழப்பு
ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் 2 பிஎஸ்எஃப் ஜவான்கள் உயிரிழந்தனர். ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ராஜஸ்தான் சாலை விபத்தில் 2 பிஎஸ்எஃப் ஜவான்கள் உயிரிழப்பு
இதுகுறித்து பார்மெர் மாவட்ட ஆட்சியர் லோக் பந்து கூறுகையில், “பார்மெரில் ராணுவ பாதுகாப்பு பணிக்காக பிஎஸ்ஃப் வீரர்கள் சென்று கொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. அதில் 2 பிஎஸ்எஃப் ஜவான்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேரை மேல்சிகிச்சைக்காக உயர்தர மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவுள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: சாக்கு மூட்டையில் சிறுமியின் உடல்... மாந்திரீகம் காரணம்..?