புதுச்சேரி கிருமாம்பாக்கம் உதவி காவல் ஆய்வாளர் முருகானந்தம், பாண்டியன் ஏட்டு லூர்து, காவலர்கள் அய்யனார், சிவகுமார் மற்றும் காவல்துறையினர் முள்ளோடை பரிக்கல்பட்டு சாலையில் இன்று காலை (மார்ச் 4) வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 500, 150, 180, 90 ஆகிய மிலி முறையே 75 லிட்டர் சாராயம் பாக்கெட் செய்யப்பட்டு கடத்திச் செல்வது தெரியவந்தது. அவற்றை பாகூர் அடுத்துள்ள தமிழ்நாடு பகுதியான உள்ளே ரிப்பட்டு கிராமத்திற்கு கடத்தி செல்வதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும், சாராயத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட உச்சிமேடு பொறையாத்மன் கோயில் வீதியைச் சேர்ந்த சின்னத்துரை (40) என்பவர் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக பாகூர் அடுத்துள்ள சோரியாங்குப்பம் சாராயக் கடையில் அதிக அளவில் சாராய பாக்கெட் செய்து பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நேற்று இரவு (மார்ச் 3) காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் தலைமையில், ஆய்வாளர் வரதராஜன், காவல் துறையினர் சோரியாங்குப்பம் சாராய கடைக்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.