புதுச்சேரி காட்டேரிக்குப்பம் அருகேயுள்ள சந்தைபுது குப்பத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாகக் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் நாகராஜ் வீட்டில் அதிரடியாகச் சோதனை செய்தனர்.
அப்போது நாகராஜ் வீட்டில் கஞ்சா செடி போன்ற தோற்றத்தில் 12 அடி உயரத்தில் ஒரு செடி வளர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து நாகராஜனைப் பிடித்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இதில் அவரது நண்பருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.