தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆஹா ஆஹா கல்யாணம்.. இரண்டரை அடி மனிதரின் இன்ப தருணம்.. - Azim Mansoori

உத்தரபிரதேசத்தில் இரண்டரை அடி உயரம் கொண்ட நபருக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு திருமணம் நடைபெற்றதை அப்பகுதி மக்கள் பெரும் விழாவாக கொண்டாடி மகிழந்தனர்.

ஆஹா ஆஹா கல்யாணம்.. இரண்டரை அடி மனிதரின் இன்ப தருணம்..
ஆஹா ஆஹா கல்யாணம்.. இரண்டரை அடி மனிதரின் இன்ப தருணம்..

By

Published : Nov 3, 2022, 8:14 AM IST

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர், அஜிம் மன்சூரி. இவர் இரண்டரை அடி உயரத்துடன் சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ளார். ஆனால், தனக்கு திருமணம் நடைபெறவில்லை என்பதை கவலையுடன் அஜிம் தெரிவித்து வந்தார். இதனிடையே கடந்த 2019ஆம் ஆண்டு சமூக ஊடகத்தின் மூலம் தன்னைப் போலவே உயரம் கொண்ட ஒரு பெண்ணை கண்டுபிடித்தார்.

ஹபூரின் மஜித்புராவில் வசிக்கும் புஷ்ரா என்ற அப்பெண், அஜிமின் காதலை 2021 ஏப்ரலில் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்றைய முன் தினம் (நவ 1), அஜிம் மன்சூரி - புஷ்ரா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் விழாவாகக் கொண்டாடினர்.

உத்தரபிரதேசத்தில் இரண்டரை அடி உயரம் கொண்ட நபர் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு திருமணம் செய்தது மிகப்பெரும் விழாவகக் கொண்டாடப்பட்டுள்ளது

தொடர்ந்து இதுகுறித்து பேசிய அஜிம், “நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என் மணமகளை வீட்டிற்கு அழைத்து வரத் தயாராக இருக்கிறேன். கடவுள் எனது எல்லா பிரார்த்தனைகளுக்கும் பதிலளித்தார். நான் அளவிட முடியாத மகிழ்ச்சியில் இருக்கிறேன். இறுதியாக நான் எதிர்கொண்ட கஷ்டங்களை (உயரம்) சமாளித்து நான் நன்றாக இருப்பதை என்னால் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.

எனது மனைவிக்கு தங்க மோதிரத்தை பரிசாக வழங்க உள்ளேன். பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது மனைவி டிம்பிள் பாபி மற்றும் பிற தலைவர்களை எனது திருமண விழாவிற்கு அழைக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இன்று அவர்களை அழைக்க முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் அவர்களை சந்திப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க:நடுரோட்டில் நடைபெற்ற காதல் திருமணம்..

ABOUT THE AUTHOR

...view details