டெல்லியில் 35 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா வழக்கில் ஆப்தாப் அமின் பூனாவாலா கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் உண்மை கண்டறியும் சோதனை, பாலிகிராஃபிக் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில், ஆப்தாப் அமினுக்கு பாலிகிராஃபிக் சோதனை நடத்த நேற்று (நவம்பர் 28) போலீசார் ரோகினியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்கு வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர். இந்த சோதனை முடிந்த பின் ஆப்தாப் அமினை மீண்டும் சிறைக்கு அழைத்துசென்றனர்.
டெல்லி கொலை வழக்கு.. பட்டாக்கத்திகளுடன் போலீஸ் வாகனம் வழிமறிப்பு.. 2 பேருக்கு நீதிமன்ற காவல்.. - டெல்லி கொலை வழக்கு
ஷ்ரத்தா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆப்தாப் அமின் கொண்டு செல்லப்பட்ட போலீஸ் வாகனத்தை பட்டாக் கத்திகளுடன் வழிமறித்த 2 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே தடய அறிவியல் ஆய்வகத்திற்கு முன்பு போலீஸ் வாகனத்தை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. அப்போது 2 பேர் பட்டாக் கத்திகளுடன் ஆப்தாப் அமினை வெளியே வர சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தினர். அந்த நேரத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் துப்பாக்கியை காட்டி மிரட்டி பட்டாகத்திகளை பறிமுதல் செய்தனர். 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் இன்று (நவம்பர் 29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி 2 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த பட்டாக்கத்தி மிரட்டலுக்கு இந்து சேனா அமைப்பு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:போலி திருமண தளங்களில் சிக்கும் இளைஞர்கள்.. நூதன மோசடியில் இளம்பெண்கள்