தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Honour Killing: ஹைதராபாத்தை உலுக்கிய ஆணவக் கொலை சம்பவத்தில் இருவர் கைது! - ஆணவக் கொலை

Honour Killing: ஹைதராபாத்தில் நிகழ்ந்த ஆணவக்கொலை சம்பவத்தில் இருவரைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐதராபாத்
ஐதராபாத்

By

Published : May 6, 2022, 5:29 PM IST

Honour Killing: ஹைதராபாத்(தெலங்கானா): தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பில்லாபுரம் நாகராஜூம் - அஷ்ரின் சுல்தானாவும் சிறுவயதில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு மதத்தினர் என்பதால் பெற்றோர் அவர்களது திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் வாழ்ந்து வந்துள்ளனர்.

மனைவி கண்முன்னே கணவன் மீது கொடூரத் தாக்குதல்:இந்த நிலையில் கடந்த புதன்கிழமை (மே 4) அன்று இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தபோது ஒரு கும்பல் அவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தியது. இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நாகராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது மனைவி அஷ்ரின் சுல்தானா அளித்தப் புகாரின் பேரில் சரூர் நகர் போலீசார், அவரது அண்ணன் சையத் மாபின் அகமது மற்றும் முகமது மசூத் அகமதை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரும்புக்கம்பியும் கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பின் ஐபிசி பிரிவு 302இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணையில் சையத் மாபின் அகமது மற்றும் முகமது மசூத் அகமது நாகராஜூவை ஏற்கெனவே கொலை செய்ய முயற்சித்ததாக தெரிவித்து இருக்கின்றனர். ஆணவக் கொலை சம்பவத்தில் இருவருக்கும் உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்று ஹைதராபாத்தின் எல்.பி நகர் பகுதியின் துணை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Honour Killing: காலில் விழுந்து கதறிய தங்கை- கருணை இல்லாமல் கணவனைக் கொன்ற அண்ணன்

ABOUT THE AUTHOR

...view details