ட்விட்டர் நிறுவனம், குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக்கை சில மணி நேரத்திற்கு முன்பு நீக்கியது. கடந்த ஆறு மாதங்களாக, எவ்வித பதிவுகளும் அவரது கணக்கில் பதிவிடாததால், ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெங்கையா நாயுடுவுக்கு மீண்டும் 'ப்ளூ டிக்'- திருப்பிகொடுத்த ட்விட்டர்! - ட்விட்டர் கணக்கு
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மீண்டும் ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் திருப்பி அளித்துள்ளது.
ட்விட்டர்
இருப்பினும், முக்கியப் பொறுப்பில் இருப்பவரின் ட்விட்டரின் கணக்கின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பலர் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்தனர். இவ்விவகாரம் குறித்து ட்விட்டர் நிறுவனத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, உடனடியாக வெங்கையா நாயுடுவின் கணக்கிற்கு மீண்டும் ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் வழங்கியுள்ளது.
Last Updated : Jun 5, 2021, 4:55 PM IST