டெல்லி:சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ட்விட்டர் கணக்கில் வைத்திருந்த டி.பியை சில மணி நேரங்களுக்கு நீக்கியது.
இது குறித்து விளக்கமளித்த ட்விட்டர் நிர்வாகம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயன்படுத்திய புகைப்படத்திற்கு ஒருவர் காப்புரிமை கோரினார். இதன் காரணமாகவே அந்தப் புகைப்படம் நீக்கப்பட்டது. இது தொடர்பான புகார்கள் சரிசெய்யப்பட்டதும், மீண்டும் அதே படம் பதிவேற்றப்பட்டது எனத் தெரிவித்தது.