ஒன்றியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கு, ட்விட்டர் நிறுவனத்தால் ஒரு மணி நேரம் முடக்கப்பட்டது. இவ்விவகாரத்தை ரவி சங்கர் பிரசாத் எழுப்பிய நிலையில், ஒரு மணிநேரத்திற்குப் பின் அவரது கணக்கு மீண்டும் இயங்கத்தொடங்கியது.
இது தொடர்பாக ரவி சங்கர் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில், "அமெரிக்க டிஜிட்டர் பதிப்புரிமை சட்டத்தை மீறி செயல்பட்ட புகாரில் எனது ட்விட்டர் கணக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி முடக்கபட்டது.
கருத்து சுதந்திரத்தை முன்வைக்கும் ட்விட்டர் நிறுவனம் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது, அந்நிறுவனத்தின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது. இதுபோன்ற எந்தவிதமான நடவடிக்கைகளை ட்விட்டர் நிறுவனம் மேற்கொண்டாலும், புதிய ஐடி விதிகளை நடைமுறைபடுத்துவதில் அரசு எந்த சமரசமும் மேற்கொள்ளாது" எனத் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசு அன்மையில் கொண்டுவந்துள்ள புதிய ஐ.டி. விதிகளைப் பின்பற்றுவதில் அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் மோதல் போக்கு நிலவிவருகிறது. விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அழுத்தம் தந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கோவிட்-19 தடுப்பூசிக்கு இனி ஆதார் எண் தேவையில்லை