சமூக வலைதளங்களுக்கு பல்வேறு புதிய விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த புதிய விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டர் நிறுவனம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கை நீதிபதி ரேகா பள்ளி தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. அப்போது ட்விட்டர் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்ற ஒரு கண்காணிப்பு அலுவலரை நியமிப்பதாகத் தெரிவித்திருந்தார்.