ஐதராபாத்: பிபிசி செய்தி நிறுவனத்தின் பிபிசி பஞ்சாபி அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது. அரசின் சட்ட கோரிக்கையை அடுத்து பிபிசி பஞ்சாபி ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் அந்த ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த முடக்கத்திற்கான சட்ட கோரிக்கை ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு தரப்பில் வழங்கப்பட்டு உள்ளதாக அல்லது பஞ்சாப் அரசு தரப்பில் வழங்கப்பட்டதா என விவரம் வெளியாகவில்லை.
இருப்பினும் பிபிசி பஞ்சாபி ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காலிஸ்தான் பிரிவிணைவாத அமைப்பான வாரீஸ் டி பஞ்சாப் குழுவின் தலைவர் அம்ரித் பால் சிங்கை பஞ்சாப் போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் இந்த திடீர் முடக்கம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு 2002 குஜராத் கலவரத்தை மையமாக வைத்து இந்தியா - மோடி மீதான கேள்விகள் என்ற தலைப்பில் பிபிசி நிறுவனம் ஆவணப் படத்தை வெளியிட்டது. இந்த ஆவணப் படத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சகம் இந்த ஆவணப் படத்திற்கு தடை விதித்தது.