தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இரட்டையர்களை மணந்த இரட்டையர்கள் - ம.பி.யில் தான் இந்த ருசிகர சம்பவம்! - marriage

மத்தியப் பிரதேச மாநிலம், ஷிந்த்வாரா மாவட்டத்தில், இரட்டை சகோதரிகளான லதா மற்றும் லட்சுமி, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த இரட்டையர்களான அமன் மற்றும் ரிஷப்பை கரம்பிடித்த அரிய நிகழ்வு அரங்கேறி உள்ளது.

Twin sisters of Chhindwara married twin brothers of Nagpur at rare ceremony
இரட்டையர்களை மணந்த இரட்டையர்கள் - ம.பி.யில் தான் இந்த ருசிகர சம்பவம்!

By

Published : Jun 25, 2023, 5:05 PM IST

ஷிந்த்வாரா (மத்தியப் பிரதேசம்): திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகப் பலர் சொல்ல கேள்விப்பட்டு இருப்போம். அந்த கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், மத்தியப் பிரதேச மாநிலம், ஷிந்த்வாரா பகுதியில், பெண் இரட்டையர்கள், ஆண் இரட்டையர்களைத் திருமணம் செய்து கொண்ட ருசிகர சம்பவம் நடந்து உள்ளது. இந்த அரிய நிகழ்வு, மக்களின் பேரார்வத்தைத் தூண்டி உள்ளது மட்டுமல்லாது, பெரும் விவாதப் பொருளாகவும் மாறி உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், ஷிந்த்வாரா பகுதியை அடுத்த திமிரி கிராமத்தில் நடைபெற்ற, இந்த இரட்டையர்களின் இரட்டை திருமணத்தைப் பார்க்க, ஊர்மக்கள் அதிக அளவில் குழுமி இருந்தனர். அந்த இடமே, மலர்கள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களால், அழகுற அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஹோம குண்டத்தை, இரட்டை மணமக்கள், 7 முறை வலம் வந்தனர்.

இரட்டை சகோதரிகளான லதா மற்றும் லட்சுமி, இரட்டையர்களான அமன் மற்றும் ரிஷப்பை கரம்பிடித்தனர். இதில், லதா அமனையும், லட்சுமி, ரிஷப்பையும் திருமணம் செய்து கொண்டனர். இந்த இரண்டு ஜோடி மணமக்களும் பார்ப்பதற்கு, கண்ணாடி பிம்பம் போன்று இருந்ததாக, இந்த அரிய திருமணத்திற்கு வந்தவர்கள், கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

இந்த இரட்டையர் திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர் பிரதீப் திவேதி கூறியதாவது, ''தான் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்தி வைத்து உள்ளேன். ஆனால், இதுபோன்ற இரட்டையர்களோட திருமணத்தை நடத்தி வைப்பது, இதுவே முதல்முறை'' என்று தெரிவித்து உள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, ''இவருக்கு இவர் என்பது கடவுள் போட்ட முடிச்சு என்பர். அதையே மிஞ்சும் விதமாக, தற்போது இரட்டைச் சகோதரிகளுக்கு, இரட்டைச் சகோதரர்களுடன் திருமணம் நடந்தேறி உள்ளது அரிய நிகழ்வு'' என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

திமிரி மொகல்லா பகுதிவாசியான கைலாஷ் கஹார் கூறியதாவது, ''இரட்டைச் சகோதரிகளுக்கு, இரட்டை சகோதரர்களுடனேயே திருமணம் நடைபெற்று இருப்பது மகிழ்ச்சிகரமான சம்பவம்'' எனக் குறிப்பிட்டு உள்ளார்.

இரட்டை சகோதரிகளின் இளைய சகோதரனான சூரஜ் கஹர் கூறியதாவது, ''லதா மற்றும் லட்சுமி பிறந்ததில் இருந்து தற்போது வரை, ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர். தற்போது, திருமண நிகழ்வால் கூட, அவர்களை பிரிக்க இயலவில்லை. அவர்கள் இருவரும், ஒரே வீட்டில் வசிக்க உள்ளனர்''எனத் தெரிவித்து உள்ளார்.

பிறந்ததில் இருந்து ஒன்றாகவே இருந்தும், வளர்ந்தும் வந்துள்ள தங்களது பிள்ளைகள், திருமண நிகழ்வின் போது பிரிந்து விடுவார்களே என்று, அவர்களது பெற்றோரும், குடும்பத்தினரும் எண்ணி இருந்தபோது, கடவுளின் கிருபையால், திருமண நிகழ்விற்குப் பிறகும், அவர்கள் தொடர்ந்து ஒரே வீட்டில் வசிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேவர் மகன் விவகாரம் - புரிதல் இல்லாதவரின் விமர்சனம் என பேரரசு கருத்து!

ABOUT THE AUTHOR

...view details