சோலாப்பூர்:மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரில் பிங்கி மற்றும் ரிங்கி (36) என்ற இரட்டை சகோதரிகள் வசித்து வந்தனர். இவர்களது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தாயும் நோய்வாய்ப்பட்டிருந்தார். இரு சகோதரிகளும் ஐடி துறையில் பணிபுரிந்து வந்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்ட தங்களது தாயைக் கவனிக்க முடியாமல் இருந்துள்ளனர்.
அப்போது, அதுல் என்ற டாக்சி ஓட்டுநர் அவர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். அவர் பிங்கி - ரிங்கியையும், அவர்களது தாயையும் கவனித்துக்கொண்டார். அவரது நல்ல குணம் மற்றும் மனிதநேயத்தைப் பார்த்த இரட்டை சகோதரிகளுக்கு அதுல் மீது காதல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், ஒருவர் மீது ஒருவர் மிகவும் அன்பு கொண்டிருந்த இரட்டையர்கள், திருமணத்திற்குப் பிறகு பிரியவும் விரும்பவில்லை. அதனால், இருவரும் அதுலை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டனர்.
இதையடுத்து, நேற்று(நவ.3) சோலாப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் இவர்களது திருமணம் நடந்தது. இவர்களது திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதேநேரம், ஒரு ஆண் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைத் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்பதால், அதுல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆட்டோவில் தவறவிட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள்... மணப்பெண் வீட்டாருக்கு காத்திருந்த நெகிழ்ச்சி...