தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'வாலி' பட பாணியில் சகோதரரின் மனைவிக்கு பாலியல் தொல்லை!

மகாராஷ்டிராவில் திருமணமாகி வீட்டிற்கு வந்த பெண்ணிற்கு உருவ ஒற்றுமையை வைத்து பாலியல் தொல்லை கொடுத்த இரட்டையரில் ஒருவர் குறித்து விளக்குகிறது,இச்செய்தி...

சகோதரரின் மனைவிக்கு பாலியல் தொல்லை
சகோதரரின் மனைவிக்கு பாலியல் தொல்லை

By

Published : May 20, 2022, 10:24 PM IST

மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்திலுள்ள ரிங் ரோடு பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவருக்கும் 20 வயதுடைய இளம்பெண்ணிற்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மணமகனுக்கு இளைய சகோதரர் உள்ளார்; இருவரும் இரட்டை சகோதரர்கள்.

இதனால் வீட்டிற்கு வந்த 20 வயது மணமகள் கணவருக்கும் கணவரின் சகோதரருக்கும் உள்ள வித்தியாசம் புரியாமல் தவித்துள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட மணமகனின் இளைய சகோதரர்,’வாலி’ திரைப்படத்தில் வருவதுபோல், தனது சகோதரனின் மனைவியை உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனை அறியாத இளம்பெண்ணும் இதனைக் கண்டுகொள்ள வில்லை.

இச்சம்பவம் அப்பெண்ணிற்கு ஆறு மாதங்களுக்குப் பின்னர் தெரியவரவே, உடனடியாக இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவிக்கிறார். இதனைக் கேட்ட கணவர் சிறிதும் அதிர்ச்சியடையாமல், தொடர்ந்து தனது சகோதரரின் ஆசைக்கு இணங்க கூறியுள்ளார். இச்சம்பவம் குடும்பத்தினருக்கு தெரியவரவே அவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதன் பிறகு, பாதிக்கப்பட்ட பெண் தனது தாய் வீட்டிற்குச்சென்றுவிடுகிறார். பின்னர் பெண்ணின் குடும்பத்தினருக்கு இந்த விவகாரம் தெரியவரவே, உடனடியாக இது குறித்து அவர்கள் சிவாஜிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இரட்டை சகோதரர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க:'மகள்களை அடித்தே கொன்ற குடிகாரத் தந்தை..!' : போலீசார் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details