ஜம்மு- காஷ்மீரில் அடிக்கடி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று வருவதால் அதிதீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீரர்களின் பாதுகாப்பை மீறி இன்று காலை நர்வால் என்ற பகுதியில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பொதுமக்கள் 6 பேர் படுகாயமடைந்தனர்.
ஜம்முவில் இரட்டை குண்டுவெடிப்பு; 6 பேர் படுகாயம்!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நார்வல் பகுதியில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 6 பேர் காயமடைந்தனர்.
ஜம்முவில் இரட்டை குண்டுவெடிப்பு; 6 பேர் காயம்
சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இது எந்த பயங்கரவாத கும்பல் நடத்திய நாசவேலை என விசாரணை நடத்தி வருவதாக அம்மாநில காவல்துறை கூடுதல் டிஜிபி முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாநில அந்தஸ்து தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி பிரதமரை சந்தித்தாரா? - நாராயணசாமி