வதோதரா (குஜராத்): பெண்களை கவர்வதற்காக விமானி வேடம் அணிந்த நபர் குஜராத் வதோதரா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். காவல் துறை விசாரணைக்கு பின் அவர் போலியான விமானி என்ற தகவல்களை பெண் நண்பர்களுக்கு அனுப்பி விடுதலை செய்தனர்.
விமானி உடை அணிந்த நபர் ஒருவர் குஜராத் வதோதரா விமான நிலையத்தில் தான் ஏர் இந்தியா விமானி என விமான நிலைய ஊழியரிடம் தெரிவிக்க சந்தேகம் அடைந்த ஊழியர் விமானநிலைய பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து விமான நிலைய பாதுகாப்பு துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரண்பாடான கருத்துகள் தெரிவிக்க அவரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட போலி விமானியை விசாரணை செய்யும் போது அவன் பெயர் ரக்ஷித் மங்கேலா மும்பை வைல் பார்லேவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட நபர் விமானியாக விரும்பினார் எனவும் குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக தனது கனவு நிறைவேறவில்லை. தற்போது மும்பை தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:Madurai Train Fire Accident: வெடித்துச் சிதறிய சிலிண்டர்கள்.. பூட்டப்பட்ட கதவுகள்.. அப்பட்டமான விதிமீறல்..?
இதனையடுத்து விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வதோதரா ஹார்னி காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தனர். இதனையடுத்து காவல் துறையினர் ரக்ஷித் மங்கேலாவிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் விமானி போல உடை அணிந்து விமானத்தின் உள்ளே இருந்து புகைப்படங்கள் எடுத்து பெண் நண்பர்களுக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது.
மேலும் ரக்ஷித் மங்கேலாவை விசாரணை செய்ததில் அகமதாபாத், ராஜ்கோட் மற்றும் நெதர்லாந்து, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் பெண் நண்பர்கள் இருப்பதாகவும் தற்போது ஹைதராபாத்தில் உள்ள பெண் நண்பர் ஒருவரை சந்திக்க விமான நிலையம் வந்ததுள்ளார். மேலும் சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை, பயங்கரவாத அமைப்பு பற்றிய தகவல்களும் இல்லை, பெண்களை கவருவதற்காக விமானி போல உடை அணிந்துள்ளார் என ஹார்னி காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும் ரக்ஷித் மங்கேலா உண்மையான விமானி இல்லை என்ற தகவலை அவனது பெண் நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பிய காவல் துறையினர் ரக்ஷித் மங்கேலாவை எச்சரித்து அவனது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:Madurai train fire accident: ரயிலில் எடுத்துச் செல்லக் கூடாத பொருள்கள் யாவை?