மும்பை:16 வாரங்கள் பல வித சஸ்பென்ஸ்களுடன், ரசிகர்களை எதிர்பார்ப்புடன் காத்திருக்க வைத்த பிக் பாஸ் 15 நேற்று (ஜன 30) முடிவுக்கு வந்தது. இதில், போட்டியின் வெற்றியாளரை, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சல்மான் கான் அறிவித்தார். இப்போட்டியை வென்றவர் தொலைக்காட்சி நடிகை தேஜஸ்வி பிரகாஷ்.
இன்ஜினியரிங் பட்டதாரியாக இருந்து தொலைக்காட்சி நடிகையாக மாறிய தேஜஸ்வி, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நாகின் 6’ நாடகத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்தார். இவர் பிக் பாஸ் பட்டத்தை வென்றதுடன், 40 லட்சம் காசோலையையும் தட்டிச் சென்றார்.