தமிழ்நாடு

tamil nadu

தனியார் பள்ளி கட்டணக் கொள்ளை: திமுக எம்எல்ஏக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

By

Published : Jun 14, 2021, 12:54 PM IST

புதுச்சேரி: கரோனா காலத்தில் தனியார் பள்ளி கல்வி கட்டணக் கொள்ளையைக் கண்டித்து திமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கல்வித் துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திமுக எம்எல்ஏக்கள்
திமுக எம்எல்ஏக்கள்

புதுச்சேரியில் கரோனா காலத்திலும் ஆன்லைன் வகுப்பு மூலம் அனைத்து தனியார் பள்ளிகளும் வகுப்புகள் நடத்திவருகின்றன. மேலும் முழுமையான கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுபோன்று பேரிடர் காலத்திலும் அனைத்துப் பெற்றோர்களையும் கட்டணம் செலுத்தினால் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் என வலியுறுத்தும் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணக் கொள்ளையைக் கண்டித்து புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிவா, சம்பத், கென்னடி ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தனியார் பள்ளி கட்டணக் கொள்ளை: திமுக எம்எல்ஏக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தனியார் பள்ளி கட்டணக் கொள்ளையைக் கண்டித்தும், உடனடியாக நீதிமன்றம் வலியுறுத்தி கல்விக் கட்டண முறையை அரசு அமல்படுத்த வலியுறுத்தியும் முழு கட்டணம் வசூலிக்கும் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பி அரசுக்கு எதிராகவும் கல்வித் துறைக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தனியார் பள்ளி கட்டணக் கொள்ளை: திமுக எம்எல்ஏக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details