ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சிம்ஹா, திருப்பதி தேவஸ்தானத்துக்கு கோயில் கட்டுவதற்காக நிலம் ஒதுக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த இடமானது 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கப்படுவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வளாகத்தில், கோயில், வேதபதசலா, தியான மையம், அலுவலகம், குடியிருப்பு பகுதி, வாகன நிறுத்துமிடம் ஆகியவை கட்டப்படவுள்ளன. எதிர்காலத்தில், இவ்வளாகத்தில் மருத்துவ மற்றும் கல்வி வசதிகளும் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.