லக்னோ:நேபாளத்தில் இருந்து கோவா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று டயர் வெடித்ததால் உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்று பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். இதுகுறித்த தகவலறிந்த போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து, உடல்களை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேருந்து மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழப்பு - 50 பேரில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். 50 பேர் படுகாயமடைந்தனர்.
இதனிடையே படுகாயமடைந்த 50 பேரில் 5 பேர் லக்னோ ட்ராமா மருத்துவமனைக்கும், மீதமுள்ளவர்கள் பாரபங்கி மாவட்ட மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டர். அதில் சிலரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தரப்பில், விபத்தின் போது, பேருந்தில் பெரும்பாலான பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பாலியல் சீண்டலுக்கு ஒத்துழைக்காத பெண் ரயிலிலிருந்து தள்ளி விட்டுக்கொலை