மெயின்புரி: உத்தரப்பிரதேச மாநிலம், மெயின்புரியில் நேற்றிரவு(ஆக.15) அதிவேகமாக சென்ற சரக்கு வாகனம் ஒன்று, சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். அதேபோல் வாகனத்தில் சென்ற ஏழு பேரில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச்சென்ற போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.