தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டிஆர்எஸ் எம்எல்ஏக்களை பாஜகவினர் ரூ.100 கோடி வரை பேரம் பேசி வாங்க முயற்சித்து வருவதாக சென்னூர் சட்டமன்ற உறுப்பினர் பால்கா சுமன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாகராசிவரு பகுதியில் உள்ள பண்ணையில் டிஆர் எஸ் எம் எல் ஏக்களை பேர பேசி வாங்க வந்ததாக பாஜகவினர் மூன்று பேர், காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பால்கா சுமன், “ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் தலா 100 கோடி ரூபாய் மற்றும் ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டன.
நான்கு எம்எல்ஏக்களை பாஜக பிரமுகர்கள் விலைக்கு வாங்க முயன்றபோது, எங்கள் (டிஆர்எஸ்) எம்எல்ஏக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தெலுங்கானா சமுதாயம் விற்பனைக்கு இல்லை என்பதை பாஜக உணர வேண்டும். கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் பாஜக பல சதிகளை செய்துள்ளது.