தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போலி டிஆர்பி விவகாரம் - ரிபப்ளிக் சேனல் தலைமை செயல் அதிகாரிக்கு பிணை

போலி டிஆர்பி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் சேனல் தலைமை செயல் அலுவலர் விகாஸ் காஞ்சந்தனிக்கு பிணை வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி டிஆர்பி விவகாரம்
போலி டிஆர்பி விவகாரம்

By

Published : Dec 16, 2020, 6:34 PM IST

மும்பை:தொலைக்காட்சி சேனல்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கையை கணக்கிடும் டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு செய்ததாக, ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனல் உள்ளிட்ட மூன்று சேனல்கள் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து, ரிபப்ளிக் சேனலின் தலைமை செயல் அலுவலர் விகாஸ் காஞ்சந்தனி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு பிணை வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக சில சேனல்கள் தங்களது டிஆர்பியை உயர்த்துவதற்காக சில குடும்பங்களுக்கு வேண்டுமென பணம் கொடுத்து அந்த சேனல்களை பார்க்கக்கூறியதாக, பார்க் அமைப்புக்கு (BARC) புகார் வந்தது. இதில், ரிபப்ளிக் சேனலின் மூத்த ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக தற்போது வரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:டிஆர்பி முறைகேடு: ரிபப்ளிக் தலைமைச் செயல் அலுவலருக்கு போலீஸ் காவல்

ABOUT THE AUTHOR

...view details