திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப்க்கு கோவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நான் வீட்டில் தனிமைபடுத்திக்கொண்டேன். எனவே, அனைவரும் கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் விரைந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கடந்த டிசம்பர் மாதத்திற்குப்பின் திரிபுராவில் கோவிட்-19 பாதிப்பு குறைந்த நிலையில், கடந்த 15 நாள்களாக மீண்டும் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.