புதுடெல்லி:டெல்லியில் சமீர் அஹுஜா என்பவர் மற்றும் அவரது மனைவி ஷாலு ஆகியோர் அசோக் நகர் பகுதியில் நான்கு மாடி வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் இந்த இரண்டு பேர் மற்றும் அவர்கள் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் சப்னா ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், மர்ம நபர்கள், வீட்டில் இருந்த கணவன்-மனைவியை கத்தியால் குத்தி கொன்றுள்ளனர், அப்போது பணிப்பெண் வீட்டுக்குள் சென்றபோது அவரையும் மர்ம நபர்கள் கொன்றுள்ளனர். ஷாலு மற்றும் பணிப்பெண் சப்னாவின் சடலங்கள் நான்கு மாடி வீட்டின் தரை தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டன, அதே நேரத்தில் சமீர் அஹுஜாவின் உடல் மேல் தளத்தில் கண்டெடுக்கப்பட்டது.
நான்கு முதல் ஐந்து பேர் வரை வந்த கொலையாளிகள் கணவன்-மனைவியை கொன்றுவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பணிப்பெண் சப்னா வந்ததால், அவரையும் மர்ம நபர்கள் கொன்றதாக தெரிகிறது.