டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை (நவ.29) தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பொருட்டு காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் திமுக, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, லோக்தன்ரிக் ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, புரட்சிக்கர பொதுவுடைமை கட்சி உள்ளிட்ட 11 கட்சிகள் கலந்துகொண்டன.
காங்கிரஸ் மாநிலங்களவைத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எனினும் மம்தா பானர்ஜியின் திருணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, சிவசேனா, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மறுபுறம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு காங்கிரஸின் கூட்டங்களை சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் காங்கிரஸின் கூட்டத்தை சிவசேனாவும் புறக்கணித்துள்ளது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : சாக்கடையில் அடைப்பு: ஒப்பந்ததாரரை சாக்கடை நீரில் உட்கார வைத்த சிவசேனா