ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜகவினரை தடியால் தாக்கிய திரிணாமுல் எம்எல்ஏ! - Trending Videos

மேற்கு வங்கத்தில் பாஜகவினரை திரிணாமுல் கட்சி எம்.எல்.ஏ தாக்கியதாகவும் பதிலுக்கு திரிணாமுல் எம்எல்ஏவின் காரை பாஜகவினர் நிறுத்தியதாகவும் இருதரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாஜகவினரை தாக்கிய திரிணாமுல் கட்சியினர் - திரிணாமுல் எம்எல்ஏவின் காரை நிறுத்திய பாஜக?
பாஜகவினரை தாக்கிய திரிணாமுல் கட்சியினர் - திரிணாமுல் எம்எல்ஏவின் காரை நிறுத்திய பாஜக?
author img

By

Published : Aug 6, 2022, 1:58 PM IST

சின்சுரா (மேற்கு வங்கம்):மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தின் சின்சுராவில் உள்ள காதினா மோர் என்ற இடத்தில், பாஜகவினரை சின்சுரா சட்டமன்ற திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் அஷீத் மஜூம்தர் தலைமையில் சிலர் தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்டுத்தீ போல சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வைரலானது.

இந்நிலையில் அம்மாவட்ட பாஜக தலைவர் துஷார் மஜூம்தர், “திரிணாமுல் தொண்டர்களை எங்கள் பாஜகவினரை, இரக்கமின்றி அடிக்குமாறு அஷீத் மஜூம்தர் எம்எல்ஏ உத்தரவிட்டார். அவரும் ஒரு சிலரை தடியால் அடித்தார்" என கூறினார்.

பாஜகவினரை தாக்கிய திரிணாமுல் கட்சியினர்

அதேநேரம் சட்டமன்ற உறுப்பினர் அஷீத் மஜும்தர், “பாஜகவினர் எனது காரை நிறுத்தி கொலை செய்ய முயன்றனர். மேலும், சட்டப் பேரவைக் கூட்டம் முடித்துவிட்டு திரும்பியபோது, ​​எனது காரை நிறுத்தி துன்புறுத்தினர்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மக்களவையில் கத்திரிக்காயை கடித்த பெண் எம்.பி., - காரணம் இதுதான்...

ABOUT THE AUTHOR

...view details