தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆரம்பமே அதகளம்- மோடி அரசுக்கு சாட்டையடி! - பெட்ரோல்

மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில், பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் மிதிவண்டியில் (சைக்கிள்) நாடாளுமன்றம் செல்வார்கள் என அக்கட்சி அறிவித்துள்ளது.

Trinamool
Trinamool

By

Published : Jul 19, 2021, 10:41 AM IST

டெல்லி : 17ஆவது மக்களவையின் 6ஆவது மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை (ஜூலை 19) காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தொடரில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மிதிவண்டியில் சென்று கலந்துகொள்ளவுள்ளனர்.

முன்னதாக இவர்கள் நாடாளுமன்றத்தின் (மக்களவை, மாநிலங்களவை) இரு அவைகளிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக கண்டனம் எழுப்புகின்றனர்.

தொடர்ந்து விஜய் சவுக்கில் தர்ணா போராட்டத்திலும் ஈடுபடுகின்றனர். இந்தத் தகவலை அக்கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

அதில், டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் முன்வைத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் தொடர் போராட்டங்களை நடத்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இன்று மழைக்கால கூட்டத்தொடர்- 31 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details