சத்தீஸ்கர் மாநிலம் பஹுன்ஹார் (Pahunhar) கிராமம் மாவோயிஸ்டின் மையமாக இருந்து வருகிறது. இந்த கிராமத்திற்கு அரசின் எந்தவிதமான சலுகைகளும் கிடைக்காமல் இருந்து வருகிறது. இது தொடர்பாக கிராம தலைவர் போசெராம் வளர்ச்சிக்கான முயற்சிகளை எடுத்தபோது உயிரிழந்தார். கடந்த 70 ஆண்டுகளாக, சுதந்திரம் தினம், குடியரசு தினங்களில் கிராம வாசிகள் முன்னிலையில் கருப்புக் கொடியை மாவோயிஸ்டுகள் ஏற்றி வந்துள்ளனர். இந்நிலையில், முதல்முறையாக குடியரசு தினத்தன்று மறைந்த கிராம தலைவரின் மகன் கேசவ் காஷ்யப், தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
70 ஆண்டுகளுக்கு பிறகு கருப்புக் கொடிக்கு பதிலாக தேசியக் கொடி!
ராய்ப்பூர்: மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டில் இருக்கும் பஹுன்ஹார் கிராமத்தில், 70 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசு தினத்தன்று தேசிய கொடியை கிராமவாசிகள் ஏற்றினர்.
இது குறித்து டான்டேவாடாவின் எஸ்பி கூறுகையில், "கருப்புக் கொடியை ஆண்டுதோறும் ஏற்றி வந்த நிலையில், முதல்முறையாக தேசிய கொடி ஏற்றப்பட்டது. அங்கிருக்கும் குழந்தைகளுக்கு தேவையான சாதனங்களும், மக்களுக்கு தேவையான அடிப்படை பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன. இது டான்டேவாடாவின் மாறிவரும் முகமாகும். இந்த கிராமத்தை நகர்ப்புற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் ஒரு பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மாற்றங்களால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
கிராமவாசிகள், கைகளில் தேசியக் கொடிகளை ஏந்தியப்படி 2 முதல் 3 கி.மீ., தொலைவிற்கு பேரணியை மேற்கொண்டனர். நக்சல் கட்டுப்பாட்டில் இதுபோன்ற பேரணி நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
TAGGED:
RUPUBLIC DAY