முன்னாள் பிரதமர் நேரு நினைவு நாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலை அருகில் உள்ள அவரது சிலைக்கு தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரியில் நேரு நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மரியாதை - nehru death anniversary
புதுச்சேரி: முன்னாள் பிரதமர் நேரு நினைவு நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு புதுச்சேரி தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாராயணசாமி, கட்சித் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்
இதனையடுத்து, வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட நேருவின் படத்திற்கு நாராயணசாமி, கட்சித் தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியின் போது நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நேரு நினைவு தினம் இன்று: நேரு கண்ட சோசலிச கனவு