ஒங்கோல் : ஆந்திர பிரதேசத்தில் காதல் விவகாரத்தில் பழங்குடியின இளைஞரை தாக்கி அவர் மீது சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஒங்கோல் கிராமத்தை சேர்ந்தவர் பழங்குடியின இளைஞர் மொடா நவீன். இவரும் ராமஞ்சேயலூவும் நண்பர்களாக பழகி வந்து உள்ளனர். ராமஞ்சேயக்லூவின் நண்பர் தொடர்புடைய பெண்ணுக்கும் நவீனுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் நவீன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இருப்பினும் நவீன் அந்த பெண்ணுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நவீன் - ராமஞ்சேயலூவும் இடையேயான நட்பில் விரிசல் விட்டு இருவரும் பிரிந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 19ஆம், தேதி நவீனை அழைத்த ராமஞ்சேயலூ மற்றும் அவரது நண்பர்கள் கூட்டாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது இரு தரப்பினரிடையே தகராறு நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதில ராமஞ்சேயலூவின் நண்பர்கள் நவீனை தாக்கி அவர் மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.
படுகாயம் அடைந்த நவீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ராமஞ்சேயலூ உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்து உள்ளனர். தொடக்கத்தில் நவீன் மீது சிறுநீர் கழிக்கப்பட்ட விவகாரம் போலீசார் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் நவீன் மீது ராமஞ்சேயலூவின் நண்பர்கள் தாக்குதல் நடத்தி சிறுநீர் கழித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அறிந்த போலீசார் தாமாக முன்வந்து பழங்குடியின இளைஞரான நவீன் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் எஸ்.சி/எஸ்.டி பிரிவில் வழக்குபதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்து உள்ளதாக தெரிவித்து உள்ளனர். வழக்கு தொடர்புடைய 8 பேரில் இரண்டு பேர் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
அதேநேரம் நவீனு - ராமஞ்சேயலூ சரித்திரப் பதிவேட்டு குற்றவாளிகள் என்றும் அவர் மீது 30க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பல்வேறு வழக்குகளில் குற்றப்பதிரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் நவீன் மீது தாக்குதல் நடத்தி சிறுநீர் கழிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். வழக்கில் தலைமறைவான ராம்ஞ்சேயலூவை வலைவீசி தேடி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க :Chamoli accident: கங்கை திட்ட பணியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து - 15 பேர் பலி!